வாழை சாகுபடி பருவம் மற்றும் இரகங்கள் நன்செய் நிலம் : நேந்திரன் மற்றும் ரொபஸ்டா ரகங்களை நன்செய் நிலத்தில் பயிரிட ஏற்ற காலம் பிப்ரவரி முதல் ஏ...
வாழை சாகுபடி பருவம் மற்றும் இரகங்கள்
நன்செய் நிலம் :
- நேந்திரன் மற்றும் ரொபஸ்டா ரகங்களை நன்செய் நிலத்தில் பயிரிட ஏற்ற காலம் பிப்ரவரி முதல் ஏப்ரல் மற்றும் ஏப்ரல் முதல் மே மாதமாகும்.
- பூவன், ரஸ்தாளி, மொந்தன், கற்பூரவள்ளி மற்றும் நெய் பூவன் ரகங்களை பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதங்களில் பயிரிடலாம்.
- ஏப்லர் முதல் மே மாதங்களில் நேந்திரன் மற்றும் ரொபஸ்டா ரகங்கள் நன்றாக வளரும்.
மலை வாழை:
- மலை வாழையை பயிரிட ஏற்ற காலம் – ஏப்ரல் முதல் மே மற்றும் ஜீன் முதல் ஆகஸ்ட்மாதங்கள்.
- நமரன், லடான், மனோரஞ்சிதம், சிறுமலை மற்றும் விருப்பாட்சி போன்ற ரகங்கள் நன்றாக வளரும்
திசு வளர்ப்பு வாழை:
- திசு வளர்ப்பு வாழைகளை வருடம் முழுவதும் பயிரிடலாம்.( வெப்பநிலை மிக குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருக்கும் போது தவிர)
- கிரேண்ட் நைன் ரகம் திசு வளர்ப்பு வாழைக்கு ஏற்றது.
புன்செய் நிலம்:
- வாழைகளை புன்செய் நிலங்களில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களிலும், நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களிலும் பயிரிடலாம்.
- ரொபஸ்டா, நேந்திரன், குட்டை கேவண்டிஷ் போன்ற ரகங்களை புன்செய் நிலங்களில் பயிரிடலாம்.
படுகை நிலங்கள்:
- படுகை நிலங்களில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களிலும், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதங்களிலும் பயிரிடலாம்.
தென்கிழக்காசியாவிலேயே வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது. இப்போது மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம்.
வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காகப் பயிரிடப்படுகிறது. ஆனால் சில வேளைகளில் அலங்காரச் செடியாகவும், நார் பெறுவதற்காகவும், வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது.
நியூ கினியாவின் குக் சகதிப்பகுதியில் நடந்த அக்ழ்வாராய்ச்சிகளின்படி, அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.
பயன்கள்
- உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து அதிகம் இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.
- வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம்.
- உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கவும், அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது.
- வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும் போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன. மேலும், இதில் பாலிபீனால் இருப்பதால் நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது. எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து, தினமும் வாழை இலையில் உண்ணுவது சிறந்தது.
- வாழைப்பழம் அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது.
- உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது.
COMMENTS