திருச்சியில்குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான.. காகித மடிப்புக்கலை பயில் முகாம் மற்றும் கதை சொல்லல், பாடல்கள். குழந்தைகளின் உ...
குழந்தைகளின் உலகம் கற்பனைகளும், வினோதங்களும் நிறைந்தவை. நேற்றைய கவலை மறந்து நாளைய பயம் தொலைத்து, இனறைய அழகிய நாளை மகிழ்ச்சியாக கொண்டாட குழந்தைகளால் மட்டுமே முடியும்.
குழந்தைகளின் இந்த குழந்தைதன்மை அப்படியே வைத்துக்கொள்வதில் கலைகளுக்கும், விளையாட்டுகளுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு.
குழந்தைகளின் உலகில் மிக முக்கியமான ஒருவர் பொம்மைகள்தான். வீட்ல அம்மா அடிச்சாலும் சரி பள்ளிக்கூடத்துல டீச்சர் அடிச்சாலும் சரி பக்கத்துவீட்டு பையன் அடிச்சாலும் முதல்ல போயிட்டு சொல்றது பொம்மைகளிடம்தான். குழந்தைகளின் மனதில் அப்படியொரு தனி இடம் பொம்மைகளுக்கு உண்டு.
நாம வேணாம்னு தூக்கிபோடுகிற எல்லா பொருட்களும் குழந்தைகளின் விளையாட்டு உலகில் தேவையான பொருட்களாக மாறி நிற்கும. அதில் காகிதங்களுக்கு முக்கியமான இடமுண்டு. அப்படியொரு வித்தியாசமான கலைதான் காகிதங்களில் விதவிதமாக பொம்மைகள் செய்யுறது. சாதரணமா நாம தினசரி பயன்படுத்துகிற நாளிதழ்கள், துண்டு காகிதங்கள் இதையெல்லாம் வீட்டுல அழகுக்காக வைக்கிற ஒரு பொருளாக மாற்றினால் எப்படியிருக்கும், அப்படியொரு கலைக்கு பெயர்தான் ஓரிகாமி. காகிதங்களை கொண்டு ஆயிரக்கணக்கான பொம்மைகள் செய்யலாம் வாங்க. நிகழ்வில் கதை சொல்லலும், பாடல்களும் உண்டு.
30 குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி. (6 வயதிற்கு மேல்) பயிற்சிக் கட்டணம் 250/-
25 ஜூன் 2023, ஞாயிறு, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
மகிழகம் கற்றல் வெளி
எண் 7, புவனேஷ்வரி நகர், கே.கே.நகர்
திருச்சிராப்பள்ளி (அரிசி குடோன் எதிரில்)
முன்பதிவு அவசியம்: 9487016501 / 9500125125
நண்பர்களுக்கும் பகிருங்கள்..
COMMENTS