தமிழக அரசு மற்றும் TAFE நிறுவனத்தின் மூலம் சிறு குறு விவசாயிகளின் நிலங்களை அதாவது 1 - 2 ஏக்கர் நிலம் வைத்துள்ள நிலங்களை தமிழக அரசு மற...
தமிழக அரசு மற்றும் TAFE நிறுவனத்தின் மூலம் சிறு குறு விவசாயிகளின் நிலங்களை அதாவது 1 - 2 ஏக்கர் நிலம் வைத்துள்ள நிலங்களை தமிழக அரசு மற்றும் TAFE நிறுவனம் இணைந்து இலவசமாக உழவு செய்து தரும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவந்து உள்ளது
கோடை உழவினை மேற்கொள்ள முடியாமல் இருக்கும் சிறு குறு விவசாயிகளின் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு 4,400 டிராக்டர்கள் மற்றும் 10,500 விவசாய கருவிகளை விவசாயிகளுக்கு தந்து உதவ TAFE நிறுவனம் முன்வந்துள்ளது. தமிழ்நாட்டில், இந்த மூன்று மாதங்களில்( ஏப்ரல்-ஜூன் ) சிறுகுறு விவசாயிகள் பயன்பெறுமாறு TAFE நிறுவனம் 4,400 டிராக்டர்கள் மற்றும் 10,500 விவசாய கருவிகளை இலவச வாடகை முறையில் வழங்குகிறது . இந்த சலுகை 30 மாவட்டங்களில் கிடைக்கும் என TAFE நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இலவச உழவு திட்டத்தினை விருதுநகர் மாவட்டத்தில் இலவச உழவு பணியினை தொடங்கப்பட்டு உள்ளது.
ஜேபார்ம் (J FARM) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உங்களின் தகவல்களை பதிவு செய்து உழவு சேவையை பயன் பெறலாம். ஸ்மாட்போன் இல்லாத விவசாயிகள் 1800 4200 100 என்ற தொலைபேசி எண்ணில் TAFE நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். தமிழகம் முழுவதும் இத்திட்டம் இருப்பதாலும் சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் இந்த இலவச உழவு பணியினை செய்து வருகிறோம். ஜுன் 30ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் விவசாய பெருமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என TAFE நிறுவனம் தரப்பிலும் தமிழ் நாடு வேளாண்மை அலுவலகம் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.
COMMENTS